தமிழகத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தயவு வேண்டும்: வசந்தகுமார்
தேனி: காங்கிரஸ் தயவு இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் வர்த்தகப் பிரிவு தலைவரும், நாங்குநேரி எம்எல்ஏவுமான வசந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நாங்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் விரைவில் அமைக்க திமுக இளைஞர் அணி மாநாட்டில் வலியுறுத்தியது வரவேற்கத்தக்கது. அதற்காக மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
விவசாயிகளுக்கு நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.1,000 வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தியுள்ளேன்.
திமுக கூட்டணியில் இருந்துகொண்டு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அரசை விமர்சனம் செய்வது தேவையற்றது. இதனால் மக்கள் தான் குழப்பம் அடைவார்கள்.
காங்கிரஸ் தயவின்றி தமிழகத்தில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. வரும் காலத்தில் அதிமுக தவிர எந்த கட்சி கூட்டணிக்கு வந்தாலும் சேர்த்துக் கொள்வோம்.
சேது சமுத்திர திட்டம் ஒரு நல்ல திட்டம். அதன் மூலம் தமிழக மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதை தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பது வருந்தத்தக்கது.
தமிழகத்தில் தலையெடுக்கும் தீவிரவாதிகளை முளையிலே கிள்ளி எறியவேண்டும் என்றார் வசந்தகுமார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications