கன மழையால் திருப்பதி மலையில் நிலச்சரிவு
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதியில் பெய்து வரும் கன மழையால் வெங்கடாஜலபதி கோவிலுக்கு செல்லும் மலைப் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் கடந்த 4 தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் ஆந்திராவில் கன மழையும், கடும் குளிரும் நிலவுகிறது.
திருப்பதியில் நேற்றிரவு பெய்த கன மழைக்கு திருப்பதி கோவிலுக்கு செல்லும் 2வது மலைப் பாதையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் மரங்கள் வேரோடு சாயந்து ரோட்டில் விழுந்ததால் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
நிலச்சரிவு ஏற்பட்டதை அறிந்த திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் உடனடியாக விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.












Click it and Unblock the Notifications