ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு - பக்தர்கள் உற்சாகம்
திருச்சி: பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு ரங்கனை வணங்கினர்.
வைணவத் திருத்தலங்களில் நடைபெறும் முதன்மையான விழாக்களில் ஒன்றான வைகுண்ட ஏகாதசி விழா இன்று கோலாகலமாக நடந்தது. 108 வைவணத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் தலமும் ஆன ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதசுவாமி கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
அதிகாலை 4 மணிக்கு ரங்கநாதப் பெருமான், ரத்தின அங்கி அலங்காரத்துடன் மூலஸ்தானத்திலிருந்து வலம் வந்தார். பின்னர் காலை 5 மணியளவில் சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் வழியாக அவர் பிரவேசித்தார். இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி மேலிட, ரங்கா, ரங்கா என கோஷமிட்டு வணங்கினர்.
பின்னர் திருமாமணி மண்டபத்தில் பக்தர்களுக்கு ரங்கப் பெருமான் அருள் பாலித்தார். பக்தர்களுக்காக பரமபத வாசல் 10 நாட்களுக்குத் திறந்திருக்கும்.
இதேபோல சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவிலிலும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு வைவணத் திருக்கோவில்களிலும் இன்று சொர்க்க வாசல் நிகழ்ச்சி வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாக நடந்தேறியது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications