முகமது ஹனீப் மீண்டும் ஆஸி. திரும்ப கோர்ட் அனுமதி

இங்கிலாந்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சம்பந்தப்பட்ட சபீல் அகமது மற்றும் கபீல் அகமது ஆகியோருடன் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார் ஹனீப். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் விசாரணையில் அவருக்கும், கபீல் சகோதரர்களுக்கும் இடையே உறவினர்கள் என்ற தொடர்பைத் தவிர தீவிரவாத தாக்குதலில் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து ஹனீப்
விடுவிக்கப்பட்டு நாடு திரும்பினார்.
இந்த நிலையில் ஹனீப்பின் பணி விசாவை ரத்து செய்த அப்போதைய ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸின் உத்தரவை ரத்து செய்து கடந்த ஆகஸ்ட்டில் பிரிஸ்பேன் உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டது.
இதை எதிர்த்து முழு பெஞ்ச் முன்பு ஆஸ்திரேலிய அரசு அப்பீல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மைக்கேல் பிளாக் தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்த தீர்ப்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் டாக்டர் முகமது ஹனீப்பின் விசாவை திரும்ப வழங்க உத்தரவிட்டது. மேலும் அவர் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் பணிபுரியவும் அனுமதி வழங்கியுள்ளது.
எனவே டாக்டர் ஹனீப் மீண்டும் விரைவில் ஆஸ்திரேலியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஹனீப் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளார். அவருக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றத்தின் உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications