பிரபாகரனுக்கு இந்தியாவில் சிகிச்சை?

நவம்பர் 26ம் தேதி கிளிநொச்சியில் உள்ள ஜெயந்திநகர் பகுதியில் இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் பிரபாகரன் படுகாயமடைந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால் இதை விடுதலைப் புலிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
ஆனால் தாக்குதலில் பிரபாகரன் காயமடைந்தது உண்மைதான், அவர் படுகாயமடைந்திருக்கிறார் என்று சமீபத்தில் மீண்டும் இலங்கை அரசும், பாதுகாப்புப் படையினரும் உறுதியாக தெரிவித்தனர்.
இந் நிலையில் பிரபாகரன் படுகாயமடைந்த நிலையில் இருப்பதாகவும், அவரது உடல் நிலை மோசமடைந்து வருவதாகவும், எனவே வெளிநாடு கொண்டு சென்று அவருக்கு சிகிச்சை அளிக்க புலிகள் முயன்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து கொழும்பிலிருந்து வெளியாகும் தி டெய்லி நியூஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், நவம்பர் 26ம் தேதி நடந்த விமானத் தாக்குதலில், பிரபாகரனுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பணியில் இருந்த 200 மெய்க்காவலர்களில் 116 பேர் இறந்து விட்டனர்.
பிரபாகரன் படுகாயமடைந்துள்ளார். அவரது ஒரு கையும், காலும் பலத்த சேதமடைந்துள்ளது. அவருக்கு தற்போது விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஆனால் ஏற்கனவே பிரபாகரனுக்கு சர்க்கரை நோய் இருப்பதால் காயம் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது. எனவே ஏதாவது வெளிநாடு ஒன்றுக்குக் கொண்டு சென்று சிகிச்ைச அளிக்க புலிகள் முயன்று வருகின்றனர்.
குறிப்பாக இந்தியாவுக்கு கொண்டு செல்வதையே அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் அதைத் தடுக்கும் முயற்சியில் இலங்கையின் முப்படைகளும் மும்முரமாக இறங்கியுள்ளன என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய தகவல் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
பிரபாகரன் உடல் நிலை குறித்து வெளியாகியுள்ள இந்தத் தகவலால் இலங்கையில் தமிழர் பகுதிகளிலும் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் நிலவுகிறது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications