வனப் பகுதியில் இருந்து பாயந்த குண்டு-சிறுமி பலி
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: தர்மபுரி அருகே வனப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமி, மர்மமான முறையில் பாய்ந்து வந்த துப்பாக்கிக் குண்டு பாய்ந்து மரணமடைந்தாள்.
தர்மபுரி மாவட்டம் ஒடசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா மற்றும் வில்லம்பு ஆகிய இரு சிறுமிகள், அருகில் உள்ள வனப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
விளையாடி விட்டு இருவரும் வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது எங்கிருந்தோ பாய்ந்து வந்த துப்பாக்கிக் காண்டு வில்லம்பு மீது பாய்ந்தது.
இதில் குண்டுக் காயம் பட்ட வில்லம்பு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள்.
அந்தக் குண்டு எங்கிருந்து வந்தது, யார் சுட்டது என்பது தெரியவில்லை. நக்சலைட்டுகள் யாரேனும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டபோது வந்த குண்டா என்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications