தூத்துக்குடி-தென் கொரிய கப்பலின் துணை கேப்டன் மர்ம சாவு
தூத்துக்குடி: தூத்துக்குடிக்கு வந்த தென் கொரிய நாட்டு சரக்கு கப்பலின் துணை கேப்டன் மர்மமான முறையில் இறந்ந்தார்.
தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆலையில் இருந்து பாஸ்பாரிக் அமிலத்தை ஏற்றி செல்வதற்காக பங்களாதோஷில் இருந்து எம்.வி.ஏஸ்-7 என்ற தென் கொரிய சரக்கு கப்பல் கடந்த 13ம் தேதி இரவு புறப்பட்டது.
கடந்த 19ம் தேதியன்று கப்பல் தூத்துக்குடியை நோக்கி வந்துக்கொண்டிருந்தபோது துணைக் கேப்டன் ஜான் அங்குள்ள கப்பலின் டேங்குகளை சுத்தம் செய்யும் பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.
30 அடி ஆழமுள்ள டேங்குக்குள் அவர் இறங்கினார். ஆனால் நெடுநேரம் வரை அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த கப்பல் ஊழியர்கள் டேங்குக்குள் இறங்கி பார்த்துள்ளனர். அப்போது உள்ளே இருந்த நீரில் ஜான் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து கப்பலின் கேப்டன் லீ-ஆங்-ஹாங் தூத்துக்குடி துறைமுகத்திற்கு தகவல் கொடுத்தார். துறைமுக அதிகாரிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து துணை கேப்டன் ஜான் உடலுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தது.
போலீசார் முன்னிலையில் ஊழியர்கள் அவரது உடலை இறக்கினர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இறந்த ஜான் டேங்கினுள் விஷ வாயு தாக்கி இறந்திருக்கலாம் என கப்பல் ஊழியர்கள் கூறுகின்றனர். ஆனால், இது கொலையா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. பிரேதப் பரிசோதனையில் தான் முழு விவரம் தெரியவரும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications