சென்னையில் கடும் பனிமூட்டம் - விமானப் போக்குவரத்து பாதிப்பு
சென்னை: சென்னை நகரில் இன்று காலை நிலவிய கடும் பனிப்பொழிவு மற்றும் பனி மூட்டம் காரணமாக சில மணி நேரங்களுக்கு இயல்பு வாழ்க்கை பாதித்தது.
சென்னையில் இன்று காலை திடீரென பனிப்பொழிவும், பனி மூட்டமும் அதிகமாக இருந்தது.
அதிகாலையில் ஆரம்பித்த இந்த பனிப்பொழிவு 9 மணி வரை விலகவில்லை. இதனால் சென்னை நகர வாசிகளுக்கு ஊட்டி, கொடைக்கானலில் இருக்கிறோமோ என்ற குழப்பம் ஏற்பட்டது. பலர் பனிப்பொழிவை கண்டு ரசித்தனர்.
ஆனால் இந்த பனிமூட்டத்தால் விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அதிகாலையில் சென்னைக்கு வந்த பல விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவித்தன.
கத்தார், ஷார்ஜா, பஹ்ரைன், மஸ்கட், துபாய் உள்ளிட்ட அரபு நாடுகள் பலவற்றிலிருந்த வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் திருவனந்தபுரம், பெங்களூர், ஹைதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
இதேபோல சென்னையிலிருந்து மதுரை, அந்தமான், டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக கிளம்பிச் சென்றன.
இதேபோல ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. கடும் பனி மூட்டம் காரணமாக ரயில்கள் மிக மிக மெதுவாக இயக்கப்பட்டன. சாலைப் போக்குவரத்தும் கூட ஓரளவு பாதிக்கப்பட்டது.
சென்னை கடற்கரையில் காலையில் வாக்கிங் சென்றவர்களுக்கு 50 மீட்டருக்கு முன்னால் உள்ளவர்களைக் காண முடியவில்லை. இருந்தாலும் பனி மூட்டத்தை ரசித்தபடி வாக்கிங், ஜாகிங்கை செய்தனர்.
இந்த திடீர் பனிப்பொழிவினால் பதட்டமடையத் தேவையில்லை என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்தது. தற்போது குளிர் காலம் ஆரம்பித்துள்ளது. எனவே இதுபோன்ற பனிப்பொழிவுகள் சகஜம்தான் என அது விளக்கியுள்ளது.
சென்னையில் குளிர் காலம் ஆரம்பித்த பின்னர் முதல் முறையாக கடும் பனிப்பொழிவு இன்றுதான் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications