காங்கிரஸுக்கு நல்ல பாடம்: இடதுசாரிகள்
டெல்லி: குஜராத்தில் மதவாத பாஜகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது, காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள், மத்திய அரசின் அணுகுமுறைகளுக்கு கிடைத்துள்ள தோல்வியாகும். குஜராத் தேர்தல் காங்கிரஸுக்கு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது என்று இடதுசாரி கட்சிகள் கூறியுள்ளன.
குஜராத் தேர்தல் முடிவு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மதவாத அரசியல் மிகவும் ஆழமாக வேரூண்றியுள்ளது நிரூபணமாகியுள்ளது. மதவாத சக்திகளை வாக்குச் சீட்டுக்கள் மூலமாக மட்டும் எதிர்க்க முடியாது, நமது அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்பது தெளிவாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தேர்தல் முடிவு ஒரு பாடமாகும். பாஜகவுக்கு மாற்றான சக்தியாக இனியும் காங்கிரஸால் நீடிக்க முடியாது என்பதும் புரிய வந்துள்ளது.
மோடிக்கு எதிராக நிலவிய அம்சங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் தவறி விட்டது. மோடிக்கு எதிரான மாற்றுத் திட்டங்களை செயல்படுத்த அது தவறி விட்டது.
அணு சக்தி ஒப்பந்தம், காங்கிரஸ் அரசின் கொள்கைகள் தோல்வி அடைந்து விட்டதை இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பரதன் கூறுகையில், பாஜகவிலிருந்து வந்த அதிருப்தியாளர்ளுக்கு டிக்கெட் கொடுத்தததுதான் காங்கிரஸ் செய்த பெரும் தவறு. குறிப்பாக மோடிக்கு எதிர்ப்பு அதிகம் என கருதப்பட்ட செளராஷ்டிரா பகுதியிலிருந்து பாஜகவுக்குக் கிடைத்துள்ள வாக்குகளைப் பார்க்கும்போது மோடிக்கு எதிரான அலை சரியாக வீசவில்லை என்று தெரிய வருகிறது.
மேலும் அதிருப்தியாளர்களை மிக எளிதில் மோடி சமாளித்துள்ளார். முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதிகளிலும் கூட பாஜகவுக்கு கணிசமான வெற்றி கிடைத்திருப்பது அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயமாகும் என்றார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications