சென்னை ஏரி உடைந்தது - ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம்
சென்னை: சென்னை அருகே நெமிலிச்சேரி ஏரி உடைந்து தண்ணீர் புகுந்ததால் சென்னை புறநகரான பட்டாபிராமின் பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த அடை மழையால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி விட்டன. இந்த நிலையில் நெமிலிச்சேரியில் உள்ள ஏரி நேற்று உடைந்தது. இதை, அந்த ஏரியை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளவர்களே, தங்களது சுய பாதுகாப்பு கருதி உடைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஏரியிலிருந்து திபுதிபுவென பாய்ந்தோடி வந்த தண்ணீர் பட்டாபிராம் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. சோழன் நகர், சார்லஸ் நகர், நேரு நகர், திருவிக நகர், எம்.டி.எச். சாலை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
நெமிலிச்சேரி ஏரியின் பெரும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தற்போது வெறும் 55 ஏக்கர் நிலம் மட்டுமே ஏரியாக உள்ளது. ஏரியின் கரைப் பகுதி மற்றும் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறும் கால்வாய் போன்றவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பாவி பட்டாபிராம் பகுதி மக்கள் குமுறுகின்றனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications