ஷார்ஜாவில் காருடன் கடலில் விழுந்த இந்தியர் சாவு
துபாய்: ஷார்ஜாவில் கடலில் காருடன் விழுந்த கேரளாவைச் சேர்ந்த தொழிலாளர் பிணமானார். நான்கு நாட்களுக்குப் பிறகு அவரது உடல் எடுக்கப்பட்டது.
கேரள மாநிலம் சிறையின்கீழ் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் குருப். இவர் ஷார்ஜாவில் உள்ள யுனைட்டெட் அரபு வங்கியில் பணியாற்றி வந்தார். டிசம்பர் 19ம் தேதி அல் குவாஸ் என்ற இடத்தில் உள்ள தனது நண்பரைப் பார்த்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அல் மம்சார் என்ற இடத்தில் உள்ள கழிமுகப் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே ஒரு கார் வேகமாக வந்தது. அதில் மோதி விடாமல் இருப்பதற்காக காரை திருப்பியுள்ளார் குருப். அப்போது கடலில் கார் விழுந்து விட்டது. இதில் குருப் இறந்துள்ளார்.
இந்த விவரம் தெரியாமல், நண்பரைப் பார்க்கப் போன குருப் திரும்பி வராததால் அவரது நண்பர்கள் பெரும் குழப்பத்தில் இருந்தனர். இதுகுறித்து ஷார்ஜாவைச் சேர்ந்த இந்தியர்கள் அமைப்பான சமதர்ஷினியைச் சேர்ந்தவர்கள் குருப்பை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் காருக்குள் பிணமாக குருப் கண்டுபிடிக்கப்பட்டார். விபத்தில் சிக்கிய அவர் கடலில் விழுந்தபோது மூச்சுத் திணறி காருக்குள்ளேயே பிணமாகி விட்டார். அவரது உடலை போலீஸார் கண்டுபிடித்து வெளியே எடுத்தனர். பின்னர் அவரது நண்பர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.
குருப்புக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். அனைவரும் குருப்பின் திடீர் மரணத்தால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications