ஐ ஆம் வெரி டயர்ட்.. இறங்கிச் சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் பைலட்
அகமதாபாத்: மும்பையிலிருந்து டெல்லி சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பனி மூட்டம் காரணமாக பயணிகளை அகமதாபாத்தில் இறக்கி பரிதவிக்க விட்டது.
ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்களின் சேவை பயணிகளை பரிதவிக்க விடுவதில் முதலிடத்தில் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையில் இருந்து 100 பயணிகளுடன் நேற்று அதிகாலையில் டெல்லி சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் தரையிறங்காமல் வெகுநேரம் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தது.
ஆனால் விமானிக்கு ஓடுபாதை தெரியாததால், இறுதியில் அந்த விமானம் அகமதாபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது. விமானியோ அகமதாபாத்தில் தரையிறங்கியவுடன் ஐ ஆம் வெரி டயர்ட் என்று சொல்லி, இதற்கு மேல் தன்னால் விமானத்தை இயக்க முடியாது என சொல்லி விட்டாராம்.
இதையறிந்த பயணிகள் அனைவரும், விமானத்தை விட்டு இறங்காமல் ஆத்திரத்துடன் இந்தியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். கடைசியில் ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் மற்றொரு விமானி மூலம் மாலை 4 மணிக்கு அனைத்து பயணிகளுடன் விமானம் மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.
இதுகுறித்து இந்தியன் ஏர்லைன்ஸ் அதிகாரி கூறியதாவது, விமானி அதிக நேரம் பணியில் இருந்ததால் சோர்வடைந்து விட்டார். அவரை மீண்டும் விமானத்தை இயக்க அனுமதிக்க முடியாது. ஆனால் பயணிகளுக்கு இது பற்றி தெரிவித்தும் அவர்கள் புரியாமல் சத்தம் போட்டனர்.
சோர்வடைந்த விமானிக்கு பயண நேரமும் முடிந்து விட்டதால், ஜெட் ஏர்வேஸின் மாற்று விமானி வரவழைக்கப்பட்டு விமானம் இயக்கப்பட்டு மீண்டும் டெல்லி புறப்பட்டு சென்றது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications