திருவாரூர்- 1000 லிட். கள்ள சாராயம் பறிமுதல், 6 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: திருவாரூரில் 1,000 லிட்டர் கள்ளச் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக டாஸ்மாக் கடைகளில் விற்பனை சரிந்து வந்தது. அம்மாவட்டம் முழுவதும் பல இடங்களில் கள்ளச் சாராயம் விற்கப்பட்டதே இதற்குக் காரணமாம்.
இதையடுத்து கோட்டூர் இன்ஸ்பெக்டர் நடனசிகாமணி, சந்தானமேரி ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனைகளில் ஈடுபட்டு கள்ளச் சாராயம் விற்ற கமலபுரம் சக்திவேல், தெற்கு வாட்டார் ராதா, கோளப்பேட்டை கோபு, ஆலந்தூர் பக்கிரிசாமி, திருக்கொள்ளிக்காடு அருளானந்தம், லெட்சுமி நாராயணபுரம் செல்லமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 1,000 லிட்டர் கள்ளச் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications