ஈராக்கில் கார் குண்டு வெடித்து 35 பேர் பலி

Subscribe to Oneindia Tamil


ஈராக்: ஈராக்கில் இன்று இரு வெவ்வேறு இடங்களில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 35 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

ஈராக்கில் உள்ள பெய்ஜி என்ற நகரில் உள்ள குடியிருப்பு வளாகத்தின் மீது டிரக் ஒன்றில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வைத்து, அந்தக் கட்டடத்தின் மீது மோதி வெடிக்கச் செய்தனர்.

இந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குடியிருப்பு வளாகத்தில் உள்ள அரசு எண்ணெய் நிறுவனம் ஒன்றின் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று அதிகாரிகள் கூறினர்.

இதே போன்று பாக்தாத்தின் வடகிழக்கு பகுதியில் பாக்குவோபா என்ற இடத்தில் தற்கொலைப்படையினர் நடத்திய தாக்குதலில் 10பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+