அதிமுக-தேமுதிக அருவெறுப்பான மோதல்: சரத்குமார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மதுரை, புதுக்கோட்டை போன்ற பல இடங்களில் அதிமுகவினரும், தேமுதிகவினரும் மோதிக் கொண்டனர். நெறிபிறழா நேர்மையையும், வன்முறையற்ற அகிம்சை அரசியலையும் வருங்காலத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கு பதிலாக, நடுரோட்டில் உள்ளாடை தெரிய வேட்டியை உயர்த்தி கட்டிக் கொண்டு, கல்லெறி போர் நடத்தி, கழிசடை ஆபாச வசன யுத்தம் நடத்தியதைப் பார்த்த மக்களிடையே அரசியல்வாதிகள் மீது அருவெறுப்பை உருவாக்கியிருக்கிறது.
மறைந்த எம்.ஜி.ஆரின் சிலையில் யார் கொடியைப் பறக்க விடுவது என போட்டி போட்டுக் கொண்டு வன்முறையை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை கெடுத்திருக்கிறார்கள். இவர்களது செயல் நகைப்புக்குகிடமாகி உள்ளது.
எம்.ஜி.ஆர் நினைவு நாளில் அமைதியாக ஊர்வலங்கள் நடத்தி பிறருக்கு முன்னோடியாக நடந்து கொண்ட நம் இயக்கத் தொண்டர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்லவற்றைச் சொல்லிச் சென்ற தலைவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு முன்னால் கட்டிப்புரண்டு சண்டைபோடும் அநாகரீக அரசியல், வருங்காலத்தில் தொடராமல் இருக்க அனைத்துக் கட்சி தலைவர்களும் உறுதியேற்று தொண்டர்களை வழிநடத்த வேண்டும்.
இவ்வாறு சரத்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications