அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வை கொலை செய்ய முயற்சி
திருநெல்வேலி: நெல்லையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வேல்முருகனை அடையாளம் தெரியாத கும்பல் கொலை செய்ய முயற்சித்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள அடையகருங்குளத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன்(46). அதிமுகவை சேர்ந்த இவர் கடந்த 2001ம் ஆண்டு அம்பாசமுத்திரம் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவர்.
தற்போது இவர் விக்கிரமசிங்கபுரம் மதுரா கோட்ஸ் மில்லில் அண்ணா தொழிற்சங்கச் செயலாளராகவும், அம்பாசமுத்திரம் ஒன்றிய ஜெ. பேரவை செயலாளராகவும் உள்ளார்.
நேற்று முன் தினம் சிவகாசியில் இருந்து தனது காரில் அம்பாசமுத்திரம் நோக்கி வந்து கொண்டிருக்கும்போது, அவரை அடையாளம் தெரியாத கும்பல் மன்னார்கோவில் விலக்கு ரயில்வே கேட் அருகே காரை வழிமறித்து கடப்பாறை, கட்டைகளால் தாக்கியது.
இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
திமுக-அதிமுக தொழிற்சங்கத்துக்கு இடையே உள்ள போட்டியால் வேல்முருகனை கொலை செய்ய முயற்சி நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையடைப்பு:
வேல்முருகன் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று அதிமுகவினர் சிவந்திபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
நெடுஞ்சாலைகளில் நெரிசல் ஏன்? வளர்ச்சியா? வீழ்ச்சியா? தவாக வேல்முருகன் அழுத்தமான பதிவு -
திருவள்ளுவருக்கு காவிச் சாயமா? தமிழர்களின் அடையாளத்தைச் சிதைக்கும் ஆளுநர் - வேல்முருகன் கண்டனம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications