புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து!

சென்னை: புத்தாண்டு தினத்தையொட்டி தமிழக ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உட்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பர்னாலா
தமிழக ஆளுனர் பர்னாலா வெளியிட்டுள்ள செய்தியில்,
இந்த புத்தாண்டு விடியல் அனைத்து துறைகளிலும் இந்த நாட்டுக்கும், நமது மாநிலத்துக்கும் வளர்ச்சியை கொண்டு வரட்டும். மகிழ்ச்சியான நன்னாளில் வலுவான, அமைதியான இந்தியாவை உருவாக்க நம்மை அர்ப்பணித்துக் கொள்ள சபதம் ஏற்போம்.
வளமைக்கும், முன்னேற்றத்துக்கும் அயராது உழைக்க சபதம் ஏற்போம். அனைவருக்கும் இந்த புத்தாண்டில் மகிழ்ச்சியும், வளமும் செழிக்க எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி
தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதில் உறுதுணையாக அமைந்த 2007ம் ஆண்டுக்கு நன்றி கூறி, 2008ம் ஆண்டை நம்பிக்கையுடன் வரவேற்கும் வேளையில், தமிழக மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறேன்.
அருமைத் தமிழ் மக்கள் மகிழ, தமிழகம் மேலும் மேன்மை பெற வரும் 2008ம் ஆணடிலும் புதிய திட்டங்களை வளர்ச்சி பணிகளைத் தொடர்வோம். தொடர்ந்து உழைத்திடுவோம் எனும் உறுதியுடன், தமிழக மக்களுக்கு மீண்டும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா
புத்தாண்டு பிறக்கும் இந்த இனிய நாளில் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை முதற்கண் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்வதற்கு ஏதுவான சூழ்நிலைகளை உருவாக்கும் இணையற்ற ஆண்டாக புத்தாண்டு விளங்கட்டும்.
மலர்கின்ற 2008ம் ஆண்டு அனைவரது வாழ்விலும் இனிமையும், மகிழ்ச்சியும் பொங்குகின்ற ஆண்டாகவும், நலங்கள் தழைக்கும் ஆண்டாகவும், வளங்கள் கொழிக்கும் ஆண்டாகவும், வெற்றிகளை குவிக்கின்ற ஆண்டாகவும் விளங்க வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினை தெரிவித்து அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை உரிதாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
உண்மையான சுதந்திரத்தின் புன்னகையை ஏழை, எளிய அனைத்து மக்களும் தரிசிக்க உத்தரவாதம் அளிக்கும் நிலை உருவாக வேண்டும். அதற்கு 2008ம் ஆண்டு வழி அமைக்கட்டும்.
போராட்டமும், துன்பமும் நிறைந்த மனித வாழ்க்கையில் சக மனிதர்களின் கண்ணீரை துடைப்பது தான் மனித நேயம். அந்த மனிதாபிமானம் எங்கும் பரவவும், பகையும், வேற்றுமையும் நீங்கவும் சாதி, சமய அரசியல் கட்சி எல்லைகளைக் கடந்து சகோதரத்துவம் தழைக்கவும், அனைவரும் இந்த புத்தாண்டில் உறுதி எடுத்துக் கொள்ளவும் என்று கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
பல சோதனைகளுக்கிடையில் 2007ம் ஆண்டு கழிந்தது. வரும் 2008ம் ஆண்டு பல சாதனைகளுக்கு அடித்தளம் அமைக்கும் என நம்புகிறேன். தமிழகத்தை பொறுத்தவரை வறுமை ஒழியவில்லை.
கடந்த அரசும், இன்றைய அரசும் 2007ம் ஆண்டில் ஏழைகளை 10 சதவீதமாக குறைப்போம் என்றனர். ஆனால் இன்றும் 20 சதவீதமாகவே உள்ளது. எழுத்தறிவு இல்லாத மக்கள் 25 சதவீதம் பேர். தமிழ்நாடு இதர மாநிலங்களுடன் ஒப்பிடும் போது கீழ்நிலையில் தான் உள்ளது. அதனால் தான் தேமுதிக ஊழலையும், வறுமையையும் ஒழிப்போம் என்பதை மூல முழக்கமாகக் கொண்டுள்ளது.
மக்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய அரசியல்வாதிகளே பிரச்சனைகளாக உள்ளனர். சாதி, மொழி, மதம், இனம் என மக்களை பிரித்து அரசியல் நடத்தி ஊழல் மூலம் சேர்த்த பணத்தில் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று நடைமுறைக்கு பயன்படாத வாக்குறுதிகளை தந்து அவர்களை வஞ்சித்து போலி ஜனநாயகத்தை கையாண்டு வருகிறார்கள்.
மக்கள் இதை உணர்ந்ததால் தான் அனைவருக்கும் பொதுவாக இயங்கும் அரசியல் இயக்கமான தேமுதிக தினந்தோறும் வளர்ந்து வருகிறது என்று கூறியுள்ளார்.
அஇசம கட்சித் சரத்குமார்
அகில இந்திய சமுத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர். சரத்குமார் கூறியதாவது,
மக்களுடைய அடிப்படை வாழ்க்கை வசதிகள் உயர வேண்டும். விலைவாசிகள் குறைய வேண்டும். சமுதாய அரசியல் துறையில் சகிப்புத் தன்மை வளர வேண்டும்.
மோதல், வன்முறை அகன்று மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும். ஜனநாயக அமைப்பை மேலும் பலப்படுத்த வேண்டும். பயங்கரவாதம் பல திசைகளில் இருந்தும் நம்மை பயமுறுத்தி வருகிறது. சட்டங்களால் சாதிக்க முடியாததை மக்கள் ஒத்துழைப்பால் சாதிக்க முடியும். இதன் தொடர்பாக விழிப்பை ஏற்படுத்த எல்லா அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications