ரத்தத்திற்கு ரத்தம், அழிவுக்கு அழிவு- பின் லேடன் எச்சரிக்கை
துபாய்: எங்களது ஜிகாத் போராட்டம் விரைவில் பாலஸ்தீனதுக்கும் விரிவடையும். சில இஸ்லாமிய நாடுகள் ஏற்றுக் கொண்டதைப் போல இஸ்ரேலை நாங்கள் ஒருக்காலமும் ஏற்க மாட்டோம் என அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் கூறியுள்ளார்.
50 நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடிய புதிய ஆடியோ கேசட்டை அவர் வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது,
எங்களது ஜிகாத் போராட்டம் விரைவில் பாலஸ்தீனதுக்கும் விரிவடையும். பாலஸ்தீனத்தின் முழு விடுதலைக்காக, இஸ்ரேலை ஒழிக்க அல்-கொய்தா உறுதி பூண்டுள்ளது. சில இஸ்லாமிய நாடுகள் ஏற்றுக் கொண்டதைப் போல இஸ்ரேலை நாங்கள் ஒருக்காலமும் ஏற்க மாட்டோம்.
ஜோர்டான் ஆற்றிலிருந்து கடல் வரை மொத்த பாலஸ்தீனத்திற்கும் சுதந்திரம் பெற போராடுவோம். ரத்தத்திற்கு ரத்தம், அழிவுக்கு அழிவு தான் சரியான போர் முறை. அதைத் தான் நாங்கள் பின்பற்றுகிறோம், பின்பற்றுவோம்.
பாலஸ்தீனத்தில் ஒரு அங்குலத்தை கூட நாங்கள் யூதர்களுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம். யூதர்களுக்கான நாட்டை எங்களால் ஏற்றுக் கொள்ளமுடியாது. அதை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம்.
பாலஸ்தீன போராட்ட அமைப்பான ஹமாஸ் இயக்கத்தை ஆசை வார்த்தை காட்டி அவர்களை புனிதப் போரில் இருந்து விலக்கி வைப்பதற்கான பணியில் செளதி அரேபியா ஈடுபட்டது. செளதி மன்னர் அப்துல்லா அமெரிக்காவின் தலைமை ஏஜென்டாக செயல்பட்டு வருகிறார்.
இராக்கின் எண்ணெய் வளத்தை கொள்ளையடிப்பதற்காக அமெரிக்கா சதி திட்டம் தீட்டியுள்ளது. இதன் ஒரு கட்டமாகத்தான் அங்கு ஒரு அரசை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சியை இராக்கியர்கள் முறியடிக்க வேண்டும். அந்த அரசை தூக்கி எறியவேண்டும்.
இந்த கூட்டு அரசு இராக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை ஏற்றுக் கொள்ளும். அமெரிக்காவுக்கு இராக்கின் எண்ணெய் வளங்களை அள்ளிக் கொடுக்கும். இப்படி ஒரு அரசை அமைக்க உதவி செய்பவர்கள், இஸ்லாமுக்கு எதிரானவர்கள். அவர்களை எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன்.
அல்-கொய்தாவை எதிர்த்து போராடுவதற்காக அமெரிக்க ராணுவத்தின் நிதி உதவியுடன், சன்னி அரபு பழங்குடி போலீஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படையில் இராக்கியர்கள் சேர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
இப்படி போராடுபவர்கள் இராக்கை காட்டிக் கொடுப்பவர்கள், இராக்கிய மக்களுக்கு அவமானத்தை தேடித் தருபவர்கள் என்று கூறியுள்ளார் பின்லேடன்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications