6 பெண்களுக்கு சயனைடு கொடுத்து கொன்ற பெண் கைது
பெங்களூர்: கஷ்டத்தில் இருக்கும் பெண்களிடம், சிறப்பு பூஜைகள் செய்வதாக கூறி அவர்களுக்கு சயனைடு விஷத்தைக் கொடுத்துக் கொலை செய்து நகை, பணத்தை திருடிய கொடூர பெண்ணை பெங்களூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அந்தப் பெண்ணின் பெயர் மல்லிகா. அவருக்கு 45 வயதிருக்கும். சில நகைகளையும், செல்போன்களையும் பெங்களூரில் உள்ள இடத்தில் விற்க முயன்றபோது டிசம்பர் 31ம் தேதி அவரை போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
மல்லிகா குறித்து மாநகர காவல்துறை ஆணையர் அச்சுத ராவ் கூறுகையில், தனி ஒரு ஆளாகவே 6 பெண்களை சயனைடு கொடுத்து இவர் கொலை செய்துள்ளார். கொலை செய்த பின்னர் நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடியுள்ளார்.
மல்லிகாவின் வேலையே ஒவ்வொரு கோவிலாக செல்வதுதான். தீவிர பக்தை போல வேடமிட்டபடி கோவிலுக்குச் செல்லும் அவர் அங்கு மனக் கஷ்டத்துடன் சாமி கும்பிட வந்திருக்கும் பெண்களை நோட்டமிடுவார்.
பின்னர் அவர்களிடம் நைசாக பேச்சுக் கொடுத்து அவர்கள் மீது அக்கறை உள்ளவர் போல காட்டிக் கொள்வார். அவர்களது நம்பிக்கையைப் பெறும் வகையில் ஆறுதலாக பேசுவார். பின்னர் சிறப்பு பூஜை செய்தால் எல்லா கஷ்டமும் போய் விடும் என்பார்.
அந்த பூஜைக்கான ஏற்பாடுகளை தானே செய்வதாகவும் கூறுவார். இதை நம்பும் அப்பாவிப் பெண்களை, புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்குக் கூட்டிச் செல்வார். அங்கு சாமி கும்பிட்டவுடன், அருகில் உள்ள ஒரு அறைக்குக் கூட்டிச் சென்று அங்கு இரவு தங்கிச் செல்லுமாறு கேட்டுக் கொள்வார்.
இரவில், அந்தப் பெண்களுக்கு சயனைடு கலந்து கொடுத்து கொன்று விடுவார். பின்னர் அவர்கள் அணிந்திருக்கும் நகை, பணம், செல்போன் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு தப்பி விடுவார்.
இதுவரை இதுபோல 6 பெண்களை மல்லிகா கொலை செய்துள்ளார். மேலும் கொலைகள் செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். ஒரு கொலை 1999ம் ஆண்டு நடந்துள்ளது. மற்ற பெண்களை 2007ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்குள் செய்துள்ளார்.
இவருடன் கூட்டாளிகள் யாரும் இருப்பதாக இதுவரை தெரியவில்லை. தனி ஆளாகவே செய்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் கூட்டாளிகள் இருக்கிறார்களா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது என்றார் ராவ்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கொலைகார மல்லிகா, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பெண் சீரியல் கில்லர் போலீஸில் சிக்கியுள்ள சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications