கூடுதல் விலைக்கு மது விற்ற 200 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்
சென்னை: டாஸ்மாக மதுக்கடைகளில் மதுவை கூடுதல் விலைக்கு விற்ற சர்ச்சையில் சிக்கிய 200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 8 பேரை டிஸ்மிஸ் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தமிழக அரசு பீர், பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானங்களுக்கு 5 ரூபாய் அளவுக்கு விலையை உயர்த்தியது. விலையை உயர்த்தியது அரசுக்கு லாபமோ இல்லையோ, டாஸ்மாக் மதுக்கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களின் காட்டில் அதிர்ஷ்ட மழை கொட்டியது.
அரசு விலை 5 ரூபாய்தான் உயர்த்தியது. ஆனால் பல கடைகளில் ஊழியர்கள், 20 ரூபாய் வரை விலையை அதிகமாக வைத்து விறபனை செய்து வருகின்றனர். மேலும் புத்தாண்டையொட்டி நடந்த விற்பனையின்போது இந்த விலை உயர்வு 50 ரூபாய் வரை இருந்ததாம்.
இந்த அநியாய விலை குறித்து மதுபான பிரியர்களிடமிருந்து ஏராளமான புகார்கள் டாஸ்மாக் அதிகாரிகளுக்குப் பறந்தது.
இதையடுத்து டாஸ்மாக் அதிகாரிகள் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் நடத்திய அதிரடி சோதனையில் அரசு நிர்ணயித்த விலையைவிட அதிக விலைக்கு விற்ற டாஸ்மாக் கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் என 212 பேர் பிடிபட்டனர். அவர்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
8 ஊழியர்களை டிஸ்மிஸ் செய்யவும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மங்கத்ராம் சர்மா நடவடிக்கை எடுத்துள்ளார்.
அரசு மதுக்கடைகளில் விலை உயர்வு, கலப்படம், வெளிமாநில சரக்குகள் விற்பனை, போலிமது ஆகியவை குறித்து மக்கள் 044-28542303 என்ற எண்ணுக்கு புகார் செய்யலாம் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications