கூரியர் நிறுவனங்களை முறைப்படுத்த புதிய சட்டம்
சென்னை: தனியார் கூரியர் நிறுவனங்களை முறைப்படுத்த சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆர்.ராசா கூறியுள்ளார்.
சென்னையில் தேசிய அளவிலான கண்காட்சியை துவக்கி வைத்த ராசா பேசியதாவது,
தபால் தலை சேகரிப்பு என்பது தனி கலையாகும். தபால் தலைகள் அந்தந்த நாட்டின் அரிய தகவல்களை அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளலாம். தபால் தலை சேகரிப்பதை ஊக்குவிப்பதற்கென்று தபால் துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.
தபால் தலை சேகரிப்பின் முக்கியத்துவத்தைக் கருதி அகில இந்திய அளவில் கண்காட்சியை தபால் துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சுதந்திரத்துக்குப்பின் 10வது கண்காட்சி சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1840ம் ஆண்டு வெளியிடப்பட்ட உலகின் முதல் தபால் தலையான பென்னி பிளாக், 1854ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தியாவின் முதல் தபால் தலையான சிந்து தபால் தலை உட்பட பல்வேறு அரிய தபால் தலைகள் இடம் பெற்றுள்ளன.
தபால் துறை சார்பில் மகாத்மா காந்தி, நேரு போன்ற தலைவர்களின் உருவம் பொறித்த தபால் தலைகள், வரலாற்று சிறப்பு மிக்க சம்பவங்களை நினைவு படுத்தும் தபால் தலைகள் என்று வெளியிடப்பட்டுள்ளன. விரைவில் மல்லிகை, சந்தன மணம் கொண்ட தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன.
உலகின் முதல் தபால் தலை உள்பட லட்கக்கணக்கான தபால் தலைகள் அடங்கிய கண்காட்சியை தொடங்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன்.
தனியார் கூரியர் நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான சட்டம் கொண்டு வரப்படும். நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும். மேலும் தபால்துறை இழப்பை சரிக்கட்டுவதற்கும் ஆவன செய்யப்படும் என்றார் ராசா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications