கல்லூரி மாணவரை அடித்த போலீசாருக்கு மனித உரிமை நீதிமன்றம் அபராதம்
விருதுநகர்: மதுரையில் கல்லூரி மாணவரை அடித்து உதைத்த போலீசாருக்கு மனித உரிமை நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், தளவாய்புரத்தை சேர்ந்தவர் தங்க முனியாண்டியின் மகன் ரஞ்சித் குமார் (25). மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும் இவர் 2003ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி தனது தந்தையை பார்க்க வேனில் வந்துள்ளார்.
ரஞ்சித் வேன் கதவை திறக்கும் போது கிருஷ்ணன் கோவிலில் தலைமை காவலராக பணிபுரியும் துரைராஜ் மீது இடித்து விட்டது. இதனால் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது.
ஆனால் ரஞ்சித்குமாரும் அவரது தந்தையும் தன்னை அடித்து உதைத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி தலைமை காவலர் துரைராஜ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
அவரது புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், விஜயகாண்டீபன் ஆகியோர் ரஞ்சித்குமாரை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து கண்மூடித்தனமாக அடித்து உதைத்துள்ளனர்.
இது குறித்து ரஞ்சித்குமார் நுகர்வோர் கவுன்சில், தமிழ்நாடு மனித உரிமை ஆனையம் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் செய்ததுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை நீதிபதிகள் தங்கராஜ், மாரியப்பன் ஆகியோர் இந்த வழக்கில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்தனர். மேலும், இரு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் ரூ.3,000 அபராதமும், தலைமைக் காவலருக்கு ரூ.2,000 அபராமும் விதித்து தீர்ப்பு கூறினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications