டெல்கி மீதான போலி முத்திரைத்தாள் வழக்கு: ஜன. 30ல் தீர்ப்பு
சென்னை: அப்துல் கரீம் டெல்கி உள்ளிட்டோர் மீதான போலி முத்திரைத்தாள் வழக்கில் வருகிற ஜனவரி 30-ந் தேதிக்கு தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. டெல்கி உட்பட 5 பேருக்கான தண்டனை விவரத்தை அன்றைய தினம் தெரிவிப்பதாக சிபிஐ சிறப்பு நீதிபதி கூறினார்.
நாட்டையே உலுக்கிய பல ஆயிரம் கோடி முத்திரைத்தாள் மோசடி வழக்கு குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் தமிழகத்தில் நடந்த முத்திரைத்தாள் மோசடி குறித்து விசாரித்த சிபிஐ, அப்துல் கரீம் டெல்கி, அப்துல் வாஹித், முன்னாள் டிஐஜி முகமது அலி, எல்.ஐ.சி அதிகாரி ராமசாமி சாஹு உள்ளிட்ட 11 பேர் மீது சென்னை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
அப்போது சர்பிராஸ் நவாஸ் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, அவருக்கு ஐந்தாண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ கோர்ட் நீதிபதி வேலு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு இன்று (ஜனவரி 2) விசாரணைக்கு வந்தது. அப்போது புனே, எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்கி, அப்துல் வாஹித், ஜேக்கப் சாக்கோ ஆகியோருடனும், பெங்களூர் சிறையில் உள்ள பாலாஜியுடனும் நீதிபதி வேலு வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தினார்.
மேலும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகமது அலி, முன்னாள் காவல்துறை உதவி ஆணையர் சங்கர், ராமசாமி சாது, நிஜாமுதீன், அவரது மனைவி நஸ்ரின், பீட்டர் கென்னடி ஆகியோர் நீதிபதி முன் நேரில் ஆஜரானார்கள்.
முக்கிய குற்றவாளிகளான டெல்கி, அப்துல் வாஹித், ஜேக்கப் சாக்கோ மற்றும் பாலாஜி, பீட்டர் கென்னடி ஆகிய 5 பேரும் குற்றத்தை ஒப்புக் கொள்வதாக நீதிபதி வேலுவிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து 5 பேரையும் வழக்கிலிருந்து தனியாக பிரித்து புதிய வழக்காக நீதிபதி பதிவு செய்தார்.
இந்த 5 பேருக்கான தண்டனை விவரத்தை ஜனவரி 30-ந் தேதி தெரிவிப்பதாக நீதிபதி அறிவித்தார். தொடர்ந்து வழக்கு விசாரணை 30-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications