பாஜகவுடன் ஜெ. நெருக்கம்: அதிமுக கூட்டணியிலிருந்து தேசிய லீக் விலகல்
சென்னை: பாஜகவுடன் ஜெயலலிதா நெருங்கி வருவதால் அதிமுக கூட்டணியில் இருந்து இந்திய தேசிய லீக் விலகியுள்ளது.
இது குறித்து இந்திய தேசிய லீக் கட்சியின் அகில இந்திய தலைவர் முகம்மத் சுலைமான் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய தேசிய லீக், தமிழ் மாநில அமைப்பு கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. தலைவராக இருந்த பஷீர் அகமது, பொதுச் செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் ஜவஹர் அலி ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அவர்கள் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
புதிய தலைவராக சையத் இனாயத்துல்லா, பொதுச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன், பொருளாளராக ஜாகிருதீன் அகமத், செயலாளர்களாக ஷகீல் அகமத், முனீருதீன் ஆகிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு ஜெயலலிதா வாழ்த்து அனுப்பி உள்ளார். அதோடு அவரை விருந்துக்கும் அழைத்துள்ளார். மேலும் பாஜகவுடன் அதிமுக நெருங்கி வருகிறது. இதனால் அதிமுக கூட்டணியை விட்டு விலகுகிறோம்.
தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதை மனதார வரவேற்கிறோம் என்றார் சுலைமான்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications