திமுக அலுவலகம் முன்பு இந்திய கம்யூ ஆர்ப்பாட்டம்!

கரூர்: திமுக தலைமை கழக பேச்சாளர் கணேசனை கண்டித்து கரூரில் திமுக அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர்.
கரூர் வெங்கமேடு அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு வாகனத்தில் வந்த இருவர் மோதிக் கொண்டனர். அதில், ஒருவருக்கு இந்திய கம்யூனிட் கட்சி இனாம் கரூர் நகர செயலாளர் சக்திவேலும், மற்றொருவருக்கு திமுக தலைமை கழக பேச்சாளர் கரூர் கணேசனும் சிபாரிசுக்கு சென்றனர்.
அப்போது அவர்கள் இருவருக்குமிடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இந் நிலையில் திமுக பேச்சாளர் கணேசனுக்கு ஆதரவாக சுமார் 30 பேர் திரண்டு வந்து இந்திய கம்யூனிட் கட்சியை சேர்ந்த சக்திவேலுவை தாக்கியுள்ளனர்.
மேலும் இந்திய கம்யூனிட் கட்சியை இழுவாகவும் பேசியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர்.
இந்த விவகாரம் காவல் நிலையத்துக்கு சென்றபோது அங்கும் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந் நிலையில் இந்திய கம்யூனிட் கட்சியினர் திமுக பேச்சாளர் கணேசனை கைது செய்யக் கோரி இன்று காலை வெங்கமேட்டில் உள்ள இனாம் கரூர் நகர திமுக அலுவலகம் முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிபிஐ மாவட்டச் செயலாளர் ரத்தினம் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது. இதனால் மீண்டும் இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications