கோர்ட்டில் பெண் வக்கீலுக்கு கைதி சரமாரி முத்தம்
நெல்லை: நெல்லை நீதிமன்றத்தில் கைதி ஒருவர் பெண் வழக்கறிஞருக்கு சரமாரியாக முத்தம் கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லையைச் சேர்ந்தவர் சிவகாந்தன். இவர் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். சிவகாந்தனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் வெளியே வரும்போது நீதிமன்ற வளாகத்தில் சாதாரண உடையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண் வழக்கறிஞரை நோக்கி வேகமாக பாய்ந்தோடிய சிவகாந்தன், அவரை கட்டிப் பிடித்து சரமாரியாக முத்தமிட்டார்.
இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண் வழக்கறிஞர் நிலைகுலைந்து அலறவே, ஓடிவந்த போலீசார் மற்றும் நீதிமன்றத்தில் நின்றவர்கள் சிவகாந்தனை அடித்து, உதைத்து பிரித்து விட்டனர்.
கைதியின் இந்த முரட்டு முத்தத்தால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் வக்கீல் நீண்ட நேரம் அதிர்ச்சி விலகாத நிலையிலேயே இருந்தார். இந்த சம்பவம் கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications