கலவரத்தில் கொல்லப்பட்ட ஆசிரியர் மனைவிக்கு அரசு வேலை

Subscribe to Oneindia Tamil

பரமக்குடி: முதுகுளத்தூர் அருகே நடந்த கலவரத்தில் கொல்லப்பட்ட தலைமை ஆசிரியரின் மனைவிக்கு அரசுப் பணி வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கப்பட்டார். இதையடுத்து முதுகுளுத்தூரில் கலவரம் வெடித்தது.

இரு தரப்பினருக்கிடையை நடந்த மோதலில் அரசுப்
பள்ளியில் வேலைபார்த்து வந்த தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர் வின்சென்ட் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

வின்சென்ட்டின் மனைவிக்கு அரசுப்பணி கொடுக்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வின்சென்ட்டின் மனைவி கிறிஸ்டோபர் சகுந்தலாவுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் நடந்தது.

இதற்கான பணி நியமன ஆணையை மாநில குடிசை மாற்று வாரியத் துறை அமைச்சர் சுப.தங்கவேலன் வழங்கியதுடன் ரூ.1 லட்சம் குடும்ப நல நிதியையும் சகுந்தலாவிடம் வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+