டெல்லி: குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் பலி
டெல்லி: டெல்லியில் இன்று அதிகாலை நடந்த பயங்கர தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர்.
மத்திய டெல்லியில் உள்ள சதார் பஜார் ரயில் நிலையம் அருகே உள்ள குடிசைப் பகுதியில் இந்த அதிகாலை 2.30 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டது.
ரயில் நிலையத்தின் லாஹரி கேட் பகுதியில் இத்தீவிபத்து ஏற்பட்டது.
இந்த குடிசைப் பகுதியில் நூற்றுக்கணக்கானோர் தங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான குடிசைகள் உள்ளன.
தீவிபத்தில் 3750 குடிசைகள் தீயில் கருகி விட்டன. 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்த 5 பேரின் உடல்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகிய நிலையில் இருந்தன.
தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் நிதியுதவி:
தீ விபத்தில் இறந்த பெரியவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், சிறியவர்களுக்கு ரூ.50,000-ம், அதிக காயம் அடைந்தவர்களுக்கு 20,000 ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 10,000 ரூபாயும் டில்லி முதல்வர் ஷீலா தீக்சித் நிதியுதவி அறிவித்துள்ளார். இது தவிர தீவிபத்தால்
பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.2000 உதவித் தொகை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications