இலங்கையில் சிறைபட்டுள்ள 3 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை
சென்னை: இலங்கை கடற்படையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 நாகை மாவட்ட மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய வெளியுறவு அமைச்சகம், இலங்கையில் உள்ள இந்திய தூதரகம், சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் மூலமாக மூன்று நாகை மீனவர்களையும், அவர்களது படகுகளயும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினத்தன்று இரவு நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 740 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அனைவரிடமும் முறையான உரிமங்கள் இருந்தன.
அவர்களில் 31 மீனவர்களையும், அவர்களது படகுகைளயும் இலங்கை கடற்படை பிடித்தது.
தகவல் கிடைத்தவுடன் அரசு இந்த விவகாரத்தை இலங்கை துணைத் தூதரகத்திற்கும், இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடமும் கொண்டு சென்றது. இதையடுத்து 28 மீனவர்களும், 3 படகுகளும் விடுவிக்கப்பட்டனர்.
அவர்களை இந்திய கடலோரக் காவல் படை பத்திரமாக தமிழகத்திற்கு அழைத்து வந்தது.
கடற்படையினரின் பிடியில் உள்ள மற்ற 3 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் மீட்க உரிய நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications