அமைச்சர் சுப.தங்கவேலனுக்கு கறுப்பு கொடி-அரசு விழா ரத்து
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே இலவச வேட்டி, சேலை வழங்க வரும் தமிழக குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் சு.ப.தங்கவேலனுக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடத்தப் போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்ததால் அரசு விழா திடீரென ரத்து செய்யப்பட்டது.
முதுகுளத்தூர் அருகே உள்ள பேரையூரில் இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா நடக்க இருந்தது. இதில் அமைச்சர் சு.ப.தங்கவேலன் கலந்து கொள்ள இருந்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை வருவாய்த் துறையினர் செய்திருந்தனர்.
ஆனால் பேரையூர் கிராம மக்கள் அமைச்சரை ஊருக்குள் வர விடமாட்டோம், அப்படி மீறி அவர் வந்தால் கறுப்பு கொடி காட்டுவோம் என கூறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் பரமக்குடி டி.எஸ்.பி. பெருமாள் தலைமையிலான போலீசார் சமரச பேச்சு நடத்தினர். ஆனால் பேரையூர் கிராம மக்கள் அமைச்சரை எதிர்ப்பதில் மிகவும் உறுதியாக இருந்ததால் விழா ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பேரையூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை இலவச கேஸ் அடுப்பு, டிவி மற்றும் இலவச நிலம் ஆகியவை வழங்கப்படவில்லை.
தற்போது வெறும் கண் துடைப்புக்காக இலவச வேட்டி, சேலை வழங்கி சமாதானப்படுத்த முயற்சி நடக்கிறது. அதனால் தான் அமைச்சரை ஊருக்குள் விட மறுக்கிறோம் என்றனர்.
மக்களின் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தால் அமைச்சர் பங்கேற்கவிருந்த அரசு விழா ரத்து செய்யப்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications