சென்னை தர்ஹா, மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

Subscribe to Oneindia Tamil


சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தர்ஹா மற்றும் கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று இரவு போலீஸாருக்கு ஒரு தொலைபேசித் தகவல் வந்தது. அதில் பேசிய பெண், அரசு ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தர்ஹாவிலும், கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் இரவு 11 மணிக்கு வெடிகுண்டுகள் வெடிக்கும் என தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸார் வெடிகுண்டு நிபுணர்களுடன் இரு இடங்களுக்கும் விரைந்தனர். கோடம்பாக்கம் மருத்துவமனைக்கு விரைந்த போலீஸார் அங்கிருந்த நோயாளிகளை முதலில் வெளியேற்றினர். பின்னர் மருத்துவமனை முழுவதும் தீவிரமாக சோதனை இடப்பட்டது. ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிய வந்தது.

இதேபோல தர்ஹாவிலும் குண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே அந்தத் தகவலும் புரளி எனத் தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+