ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ஆளுநர் சம்பளம் உயர்வு
டெல்லி: குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த சம்பள உயர்வு 2007ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுதொடர்பான மத்திய அரசின் முடிவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது.
அதன்படி குடியரசுத் தலைவரின் சம்பளம் ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்படுகிறது. துணை குடியரசுத் தலைவரின் ஊதியம் ரூ. 40 ஆயிரத்திலிருந்து ரூ. 85 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. ஆளுநர்களின் சம்பளம் ரூ. 36 ஆயிரத்திலிருந்து ரூ. 75 ஆயிரமாக உயருகிறது.
மேலும் ஓய்வு பெற்ற குடியரசுத் தலைவர்களுக்கான ஓய்வூதியம் ஆண்டுக்கு ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ. 6 லட்சமாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
இந்த ஊதிய ஊயர்வுக்கு முன்னதாக எம்.பிக்களுக்கு மாதந்தோறும் ரூ. 68 ஆயிரம் வரை ஊதியம் மற்றும் பிற சலுகைகள் இருந்து வந்தன. இது குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், ஆளுநர்களின் சம்பளத்தை விட உயர்வானதாக இருந்ததால்தான் இப்போது இந்த மூன்று பேரின் ஊதியங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநரின் ஊதிய உயர்வு குறித்து உரிய முடிவை மேற்கொள்ளுமாறு அந்த மாநில அரசுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications