பிப்ரவரி 29ல் மத்திய பட்ஜெட்
டெல்லி: மத்திய அரசின் 2008-09ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் பிப்ரவரி மாதம் 29ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் பிப்ரவரி 25ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து பிப்ரவரி 29ம் தேதி மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
வழக்கமாக பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு லீப் ஆண்டு என்பதால் 29ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு முன்பாக ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
2009ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் வருகிறது என்பதால் இந்த பட்ஜெட்டில் பெரிய அளவில் வரி விதிப்புகள் இருக்காது எனத் தெரிகிறது.
வருமான வரி உச்சவரம்பு ஓரளவு உயர்த்தப்படக் கூடும் எனத் தெரிகிறது. மேலும் சில சலுகைகளும் அறிவிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications