சபரிமலை: எரிமேலியில் இன்று 'பேட்டை துள்ளல்'
பத்தனம் திட்டா: சபரிமலை மகர விளக்கு பூஜையின் ஒரு பகுதியாக, எரிமேலியில் இன்று பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 13ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் இருப்பதால் அங்கு கூட்ட நெரிசல் அதிகம் காணப்படுகிறது.
பக்தர்கள் கூட்டத்தையடுத்து நேற்று முதல் சன்னிதானம் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12.30 மணிக்கு மூடப்படுகிறது.
இந்த நிலையில் முக்கிய நிகழ்ச்சியான பேட்டை துள்ளல் இன்று எரிமேலியில் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
மகர விளக்கு பூஜையின்போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்களை சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படும் திருவாபரண ஊர்வலம் நாளை பந்தளம் சாஸ்தா சன்னிதானத்திலிருந்து தொடங்குகிறது.












Click it and Unblock the Notifications