புலிகளின் கடற்படை தளம் தகர்ப்பு

Subscribe to Oneindia Tamil


கொழும்பு: முல்லைத் தீவின் வடக்கில், அல்லம்பில் என்ற இடத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய கடற்படை தளத்தை குண்டு வீசித் தகர்த்து விட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வன்னி மற்றும் மன்னார் பகுதிகளில் கடும் சண்டை நடந்து வருகிறது.

இந்த நிைலயில் முல்லைத் தீவு அருகே உள்ள புலிகளின் கடற்படைத் தளத்தை குண்டு வீசித் தாக்கியுள்ளது இலங்கை விமானப்படை.

அல்லம்பில் என்ற இடத்தில் உள்ள புலிகளின் கடற்படை தளம் மீது இன்று காலை விமானப்படை விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் தொடுத்தன. இதில் அந்த கடற்படைத் தளம் முற்றிலும் சேதமடைந்து விட்டதாக பாதுகாப்புத் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்று தெரியவில்லை. தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+