சமயபுரம் அருகே அரசு பேருந்து-கார் மோதலில் 2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil


சமயபுரம்: சமயபுரம் அருகே அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேராக மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் 3 பேர் தங்களுடன் வேலை பார்க்கும் சக ஊழியரின் தங்கை திருமணத்திற்காக தென்காசிக்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.

திருச்சியை அடுத்துள்ள சமயபுரம் அருகில் இன்று அதிகாலையில் கார் வந்து கொண்டிருக்கும்போது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து மீது நேருக்கு நேராக மோதியது.

இந்த விபத்தில் கார் டிரைவர் ரமேஷ், தனியார் நிறுவன ஊழியர் தனீஷ் ஆகியோர் இறந்து விட்டனர். மேலும் பார்த்தசாரதி, சுரேஷ் ஆகியோர் படுகாயமடைந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+