கரூரில் ஒரே நாளில் 53 ரவுடிகள் கைது
கரூர்: கரூரில் ஒரே நாளில் 53 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
கரூர் எஸ்.பி. சண்முகவேல் உத்தரவின் பேரில் ரவுடிகள் நடவடிக்கையை கட்டுப்படுத்த நேற்று முன் தினம் இரவு போலீசார் விடிய விடிய வாகன தணிக்கை சோதனை, லாட்ஜ்களில் சோதனை நடத்தினர்.
மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த சோதனை நடந்தது. இதில் கரூரில் 15 பேரும், குளித்தலையில் 7 பேரும், வெங்கமேட்டில் 12 பேரும் உட்பட மொத்தம் 53 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமானதாக இருந்ததால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பழைய குற்றவாளிகள், தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் யாரும் இருக்கிறார்களா என விசாரணை நடந்து வருகிறது.
அதே போன்று, கடந்த சில நாட்களாக கரூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்ட 174 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications