கஞ்சா கேஸ்-சுதாகரனுக்கு பிடிவாரண்ட்
Subscribe to Oneindia Tamil

சென்னை: கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் இன்று ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது.
கடந்த 2001ம் ஆண்டு சுதாகரன் கஞ்சா வைத்திருந்ததாக கூறி அவர் மீது ஜெயலலிதா ஆட்சியில், வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுதாகரன் மீது போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. பின்னர் சுதாகரன் ஜாமீனில் விடுதலையானார்.
இந்த வழக்கு பலமுறை நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோதும் சுதாகரன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. இன்றும் சுதாகரன் வரவில்லை. இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு, ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட்டைப் பிறப்பித்து நீதிபதி முருகானந்தம் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications