மழை வெள்ள பாதிப்பு: இன்று மத்திய நிபுணர் குழு தஞ்சை வருகை
தஞ்சாவூர்: மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட இன்று மத்திய நிபுணர் குழு தஞ்சை வருகை தர உள்ளதாக தஞ்சை கலெக்டர் விஜயராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தஞ்சை கலெக்டர் விஜயராஜ்குமார் விடுத்துள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவ மழை கடந்த டிசம்பர் மாதத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக பெய்துள்ளது. இதனால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், ஏரிகள் , குளங்கள், சாலைகள், வீடுகள் போன்றவை பாதிக்கப்பட்டன.
மழை, வெள்ள பாதிப்பு குறித்து மத்திய குழு 11 ம் தேதி தஞ்சை வருகை தர உள்ளது.
மதியம் 1 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை கல்லணை அருகே தோகூர், கிளியூர், கடைக்குடி, நெடுங்குளம், அகரப்பேட்டை, கரூப்பூர், அந்தலி, பெரம்பூர் உள்ளிட்ட முக்கிய கிராமங்களை அவர்கள் பார்வையிடுகின்றனர்.
பின்னர், அரசு சுற்றுலா மாளிகையில் எம்பி, எம்.எல்.ஏ. மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து மழை பாதிப்பு மற்றும் நிவாரணம் சம்பந்தமாக கருத்து அறிய உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications