முதல் ஹஜ் யாத்ரீகர் குழு தமிழகம் திரும்பியது
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஹஜ் கமிட்டி மூலம் புனித யாத்திரை மேற்கொண்ட தமிழக யாத்ரீகர்களில் முதல் குழுவினர் இன்று சென்னை திரும்பினர்.
இந்த ஆண்டு ஹஜ் கமிட்டி மூலமான புனித யாத்திரையில் தமிழகத்தைச் சேர்ந்த 3,848 பேர் செளதி சென்றனர். டிசம்பரில் ஹஜ் யாத்திரையாக சென்ற அவர்களில் முதல் குழுவினர் இன்று சென்னை திரும்பினர்.
மொத்தம் 444 பேர் சென்னை வந்து சேர்ந்தனர். அவர்களை தமிழக அமைச்சர் மொய்தீன் கான், தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் ஜே.என்.ஹாரூண் ஆகியோர் வரவேற்றனர்.
ஹஜ் யாத்ரீகர்களுடன் சென்னை திரும்பிய தமிழக ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் அபூபக்கர் கூறுகையில், இன்று 444 பேர் திரும்பியுள்ளனர். மற்றவர்கள் இன்னும் 4 நாட்களில் திரும்பி விடுவார்கள்.
ஹஜ் யாத்திரை மிகவும் சவுகரியமாகவும், எந்தவித குறைகளும் இன்றி சிறப்பான முறையில் அமைந்தது என்றார்.












Click it and Unblock the Notifications