சுஷில்ஹரி பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் மாநாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி சர்வதேச உறைவிடப் பள்ளியில், வருடாந்திர தலைமை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியைகள் மாநாடு நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 275க்கும் மேற்பட்ட உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் இதில் கலந்து கொண்டனர்.
சுஷில்ஹரி சர்வதேச உறைவிடப் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா வரவேற்புரையாற்றினார். மாணவர்களின் எதிர்காலத்தை சிறந்த முறையில் செதுக்குவதில் ஆசிரியர்களின் பங்கு குறித்து அவர் விவரித்துப் பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வி.ரமணா தலைமை தாங்கினார். மாவட்ட துணை கல்வி அதிகாரி மாணிக்கராஜ், செங்கல்பட்டு மாவட்ட துணை கல்வி அதிகாரி கணேசமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications