தடையை மீறி ஜல்லிக்கட்டு-தமிழர் வீர விளையாட்டு பாதுகாப்புக் குழு முடிவு
சென்னை: இந்நிலையில் உச்சநீதிமன்றம் விதித்த தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்துள்ளதாக தமிழர் வீர விளையாட்டு பாதுகாப்புக் குழு தலைவர் ரித்திஷ்குமார், செயலாளர் ஒண்டிராஜ் ஆகியோர் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு. 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த விளையாட்டு இருந்ததாக ஓலைச் சுவடிகள் தெரிவிக்கின்றன. ஒரு மாவட்டத்துக்கு 2,500 ஜல்லிக்கட்டு மாடுகள் வீதம் பல மாவட்டங்களில் இதற்கென்றே வளர்க்கப்பட்டு வருகின்றன.
பாரம்பரியம் மிக்க இந்த விளையாட்டை காண ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டினர் வருகிறார்கள். பல கிராமங்களில் இந்த போட்டிகள் நடக்கிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக பிரசித்த பெற்றது.
ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்த முடியாது. தடையை மீறி இந்த போட்டி நடைபெறும். தமிழர்களின் வீரமும், பாரம்பரிய பண்பாடும் பாதுகாக்கப்பட தமிழர்கள் வீர விளையாட்டு பாதுகாப்பு குழு போராடும் என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications