மோசடி செய்த தாசில்தார், விடுதி வார்டன் சஸ்பெண்ட்!

Subscribe to Oneindia Tamil


சீர்காழி: சீர்காழியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் முறைகேடு செய்த தனி தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

நாகை மாவட்டத்தில் முல்லைவேந்தன் எம்.எல்.ஏ. தலைமையிலான சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு ஆய்வு நடத்தியது.

சீர்காழி ஆதி திராவிடர் நலத்துறை விடுதியை இக்குழுவினர் பார்வையிட்டனர். அங்குள்ள வருகை பதிவேட்டை சோதனை செய்தபோது, வருகை பதிவேட்டில் பதிவானவர்களை விட மிகக் குறைவான மாணவர்களே விடுதியில் இருப்பது தெரியவந்தது. இது குறித்து அதிகாரிகள் விடுதி வார்டன் குணசேகரனிடம் விளக்கம் கேட்டதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை.

மேலும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சீருடை வழங்கப்படாமல் இருந்ததும் தெரிய வந்தது.

அதிகாரிகள் இதுகுறித்து நடத்திய விசாரணையில், விடுதியை ஆய்வு செய்ய வேண்டிய தனி தாசில்தார் சுவாமிநாதன் தனது பணியை முறையாக செய்யவில்லை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து தனி தாசில்தார் சுவாமிநாதன், விடுதி வார்டன் குணசேகரன் ஆகியோரை நாகை மாவட்ட கலெக்டர் ஜவஹர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+