மின், உர தட்டுப்பாடு-உண்ணாவிரதம் இருந்த வைகோ
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி: தமிழகத்தில் தொடர் மின்வெட்டு, உரத்தட்டுப்பாடு ஆகியவைகளை கண்டித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று கோவில்பட்டியில் உண்ணாவிரதம் இருந்தார்.
உண்ணாவிரதத்தின் போது வைகோ கூறியதாவது,
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மின்வெட்டு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு போதிய உரம் கிடைக்காமல் பயிர்கள் அனைத்தும் வீணாகி வருகிறது. இதனால் அவர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர் என்றார்.
இந்த உண்ணாவிரதத்தில் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் நாசரேத் துரை, சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் எம்.பி உட்பட ஆயிரக்கணக்கான மதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
கோவில்பட்டி இனாம் மணியாட்சி பைபாஸ் சந்திப்பில் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அதிமுகவை சேர்ந்த ஏராளமான தொண்டர்களும் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications