பெனாசிரின் கராச்சி வீடு அருங்காட்சியமாகிறது

Subscribe to Oneindia Tamil


இஸ்லாமாபாத்: கராச்சியில் உள்ள மறைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் வீடு மியூசியமாக மாற்றப்படவுள்ளதாக அவரது கணவர் ஆசிப் அலி ஜர்தாரி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவருமான பெனாசிர் பூட்டோ கடந்த 2007 டிசம்பர் 27ம் தேதி தீவிரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கராச்சியில் உள்ள பெனாசிரின் வீடு அருங்காட்சியமாக மாற்றப்படவுள்ளதாக அவரது கணவர் ஜர்தாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பெனாசிர் பாகிஸ்தானில் இருந்த போது கராச்சியில் தங்கியிருந்தார். அப்போது மகன் பிலாவல் பிறந்த போது, கராச்சி இல்லத்திற்கு பிலாவல் பெயரை வைத்தார்.

தற்போது பெனாசிர் மறைந்துள்ள நிலையில் அவர் இருந்த கராச்சி இல்லத்தை அவரது நினைவாக மியூசியமாக மாற்ற முடிவு செய்துள்ளோம். எனது மனைவியும், அவரின் தந்தையும் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர்கள்.

அவர்களின் பெருமைகளை உணர்த்தும் வண்ணம் தற்போது கராச்சி இல்லம் பொதுமக்களுக்காக அர்ப்பணிக்கப்பட உள்ளது என்றார்.

பெனாசிர் கடந்த 8 வருடங்களாக லண்டனில் இருந்தபோது, கராச்சியில் உள்ள பிலாவல் இல்லத்தில் ஜர்தாரி தங்கியிருந்தார்.

தற்போது இந்த இல்லத்தை மியூசியமாக மாற்ற முடிவு செய்துள்ளதால் ஜர்தாரி லாகூருக்கு தனது வீட்டை மாற்ற முடிவு செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+