சிமென்ட் விலைக் குறைப்பு: அதிமுக, பாமகவுக்கு கருணாநிதி கண்டனம்
சென்னை: சிமென்ட் விலைக் குறைப்பு தொடர்பாக சில கட்சிகள், அரசியல் லாபத்திற்காக மக்களைக் குழப்பப் பார்க்கின்றன. தனியார் சிமென்ட் தயாரிப்பாளர்கள் வழங்கவுள்ள மாதம் 20 லட்சம் மூடை மென்ட் அரசின் நுகர்வோர் வாணிபக் கழகம் மூலம் மக்களுக்கு விற்பனை செய்யப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சிமென்ட் விலைக் குறைப்பு தொடர்பாக பாமகவும், அதிமுகவும் அரசின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளன. இதற்கு முதல்வர் கருணாநிதி இன்று பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தனியார் சிமென்ட் நிறுவனங்கள் அனைத்து மாவட்டங்களிலும் மாதம் 20 லட்சம் சிமென்ட் மூடைகளை, மூடை ரூ. 200க்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளன.
இந்த சிமென்ட் மூடைகள், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும்.
1000 சதுர அடி வரை வீடு கட்டும் நலிவடைந்த, பொருளாதர ரீதியாக பின்தங்கியஉள்ள மக்கள், வட்டாட்சியரிடமிருந்து (தாசில்தார்) பெறப்படும் ஒதுக்கீட்டுக் கடிதத்தைக் காட்டி இந்த சிமென்ட்டைப் பெறலாம்.
மாநிலம் முழுவதும் உள்ள 209 மண்டல நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கிகள் மூலம் இந்த சிமென்ட் விநியோகிக்கப்படும்.
அரசின் முடிவை சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பாராட்டிக் கொண்டுள்ள நிலையில், சிலர் மட்டும், அரசியல் லாபத்திற்காக இதை அரசியலாக்க முயற்சிக்கின்றனர்.
தேவையில்லாத ஐயப்பாடுகளை எழுப்பி, மக்கள் மனதில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில், அரசின் நடவடிக்கையை விமர்சித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
எனவே மக்களுக்கு இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
உற்பத்தியாளர்களிடமிருந்து அரசு பெறும் சிமென்ட், சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள, நடுத்தர வர்க்கத்தினருக்குத்தான் விநியோகிக்கப்படவுள்ளது என்பதை தெளிவாக சொல்ல விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications