இலங்கை கடற்படைத் தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர் படுகாயம்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் நடத்திய வெறித் தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 601 இயந்திரப் படகுகளில் நேற்று அதிகாலை கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு திடீரென இலங்கை கடற்படையினர் வந்தனர்.
தமிழக மீனவர்களை சுற்றிச் சூழ்ந்த அவர்கள் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் ஒரு படகில் இருந்த ராமேஸ்வரம், மல்லிகை நகரைச் சேர்ந்த சேகர் (40) என்பவர் படுகாயமடைந்தார். அவரது வலது தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது. படகிலேயே அவர் மயங்கி விழுந்தார். சத்யம், செல்வம், கணேசன் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
அதன் பின்னர் தமிழக மீனவர்கள் வேகம் வேகாக கரைக்குத் திரும்பினர்.
ராமேஸ்வரம் மருத்துவமனையில் முதலுதவி கொடுக்கப்பட்ட சேகர் பின்னர் ராமநாதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் அங்கிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். நிறைய ரத்த இழப்பு ஏற்பட்டிருப்பதால் அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரின் இந்த தாக்குதலால் ராமேஸ்வரம், ராமநாதபுரம் பகுதி மீனவர்கள் பெரும் கோபத்துடன் காணப்படுகின்றனர்.
இலங்கை கடற்படை தொடர்ந்து இவ்வாறு தாக்கி வருவது தங்களது தினசரி வாழ்க்கையை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications