மறு ஆய்வு மனு தாக்கல்: தமிழக குழு டெல்லி பயணம்

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரும் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்வதற்காக உயர் மட்டக் குழு சென்னையிலிருந்து இன்று டெல்லிக்கு விரைந்தது.
பல நூற்றாண்டுளாக தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும், தமிழர்களின் வீர பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் ஒற்றைத் தீர்ப்பில் தடாலடியாக தடை விதித்து விட்டது.
இதனால் தமிழக மக்கள் குறிப்பாக தென் தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்துள்ளனர். காலம் காலமாக நடத்தப்பட்டு வரும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கு தடை விதித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
கருணாநிதி ஆலோசனை:
தென் தமிழக கிராமங்களில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுவதைக் கருத்தில் கொண்டு முதல்வர் கருணாநிதி நேற்று உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டை தடை செய்து பிறப்பிக்கப்பட்ட இடைக்கால ஆணையை ரத்து செய்ய, தமிழக அரசும் மற்றவர்களும் முன் வைத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த செய்தி தென் மாவட்டங்களில் பெரும் ஏமாற்றத்தினனை விளைவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மேலும் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வரும் இந்த வீர விளையாட்டு தடை செய்யப்பட்டதை உச்சநீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
முதல்வர் கருணாநிதி இதுகுறித்து அப்பீல் செய்வற்கு, மறு ஆய்வு நடத்தப்படுவதற்கான மேல் நடவடிக்கையினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டதின் பேரில், இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அரசால் எடுக்கப்பட்டு வருகிறது.
சட்டத்துறை, பொதுத்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கொண்ட குழு இதுதொடர்பாக டெல்லிக்கு விரைகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
டெல்லி விரைந்தது:
இந்த நிலையில் தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் தேவஜோதி ஜெகராஜன், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர், உளவுப்பிரிவு ஐஜி ஜாபர் சேட் உள்ளிட்டோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட குழு இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றது.
இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்ற இந்த குழு நாளை உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்கிறது. இதை அவசர மனுவாக கருதி விசாரிக்கவும் கோரிக்கை விடுக்கவுள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications