புதிய இடத்துக்கு இடம் மாறும் காங். தலைமையகம்
டெல்லி: டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் நவீன வசதிகளுடன் புதிதாக வேறு இடத்துக்கு மாற்றப்பட உள்ளது.
சமீபத்தில் உச்சநீதிமன்றம், டெல்லியில் மக்கள் வசிக்கும் இடங்களில் உள்ள கட்சி அலுவலகங்களை வேறு இடத்துக்கு மாற்ற என உத்தரவிட்டது.
இதனால் தற்போது 24, அக்பர் ரோடு என்ற முகவரியில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் காங்கிரஸ் தலைமையகம், மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வேறு இடத்துக்கு மாற்றப்பட உள்ளது.
இதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 8,093 சதுர அடி இடம் தீன் தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் 208, ரோஸ் அவென்யூ என்ற பங்களாவை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.
இந்த இடத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் கட்ட இம்மாத இறுதியில் அடிக்கல் நாட்டப்படுகிறது. அடுத்த 1 வருடத்தில் கட்சியின் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான மோதிலால் வோரா தெரிவித்தார்.
தற்போது அந்த பங்களாவில் டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் ஆருயூசு வசித்து வருகிறார். அவருக்கு வேறு இடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய ஊரக மேம்பாட்டு துறை ஒவ்வொரு கட்சிக்கும், நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் உள்ள எம்பிக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடம் ஒதுக்க உள்ளது. இதன் மூலம் மாநிலங்களில் உள்ள பல கட்சிகள் டெல்லியில் அலுவலகம் கட்டும் வாய்ப்பை பெற்றுள்ளன.
-
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications