பெட்ரோல், டீசல், காஸ் விலை உயருகிறது - 17ம் தேதி அறிவிப்பு
டெல்லி: பெட்ரோல், டீசல், காஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான இறுதி முடிவு வருகிற 17ம் தேதி எடுக்கப்பட்டு அறிவிக்கப்படவுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை பெருளவு உயர்ந்து விட்டதால் பெட்ரோலியப் பொருட்களின் விலைய கடுமையாக உயர்த்த வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தின் அளவு பெருமளவு உயர்ந்து விடும் என்று மத்திய அரசை பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் இடைத் தேர்தல் வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததாலும், இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும் என்பதாலும் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த விரும்பினாலும் கூட அதை செயல்படுத்த முடியாமல் தவித்து வந்தது மத்திய அரசு.
இந்த நிலையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதுகுறித்த இறுதி முடிவை வருகிற 17ம் தேதி மத்திய அமைச்சரவை எடுக்கவுள்ளது.
அதன்படி பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் விலையை 1 ரூபாயும் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் வீட்டு உபயோகத்திற்கான காஸ் சிலிண்டரின் விலையையும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காஸ் விலை சிலிண்டருக்கு ரூ. 30 வரை உயரக் கூடும் எனத் தெரிகிறது.
பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த இடதுசாரிகளின் ஒப்புதலை மத்திய அரசு பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
-
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications